“தொழிலாளர்கள் எல்லாம் ஒரே ஹாப்பி” ஆயிரக்கணக்கான தமிழர்களின் ஆதரவை பெற்ற PSA… விருது வழங்கி கௌரவித்த சிங்கப்பூர்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகப்படியான வெளிநாட்டவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்யும் நிறுவனம் என்றால் பி எஸ் ஏ(PSA) நிறுவனம் ஆகும். இன்ஜினியரிங், கலை அறிவியல் துறையில் டிகிரி, டிப்ளமோ என பல்வேறு பட்டப்படிப்பு முடித்து இருந்தும் பிஎஸ்எ நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் தமிழர்கள் ஏராளம்.

இந்நிலையில் ஊழியர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற இடம் என்ற கருத்துக்கணிப்பின் அடிப்படையில், வேலை இடத்தில் மனநல சுகாதாரத்திற்கான விருதினை பிஎஸ்சி நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. Psaவில் வேலை செய்யும் கிட்டத்தட்ட 3000 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலை செய்பவர்களிடம் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தேவைகள், அவர்களுக்கான சுகாதார தேவைகள், அவர்களின் கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து தேவைகளை நிறைவேற்றும் தன்மை, மொழி சுதந்திரம் போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்கணிப்புகள் நிகழ்த்தப்பட்டன.

இதில் பிஎஸ்எ நிறுவனம் ஊழியர்களிடையே பெரும்பாலான ஆதரவினை பெற்றுள்ளது. மேலும் நிறுவனம் ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதாகவும் ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எப்படியோ அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்கள் நிம்மதியாக வேலை செய்தால் நமக்கும் சந்தோசம் தானே!