குடியிருப்புகளில் இருந்து வெளியேறிய 10,000 இந்தோனேசியர்கள்!! ஏன்? என்ன நடந்தது?

குடியிருப்புகளில் இருந்து வெளியேறிய 10,000 இந்தோனேசியர்கள்!! ஏன்? என்ன நடந்தது?

ருவாங் தீவில் ஏற்பட்டுள்ள அபாயகரமான எரிமலை வெடிப்பு காரணமாக ஏறக்குறைய 10,000 இந்தோனேசியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகளை அரசு கட்டித்தருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலை அடிக்கடி வெடிப்பதால் அதிலிருந்து வெளியாகும் சாம்பல் காற்றில் கலந்து வருகிறது.

இதனால் அருகில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர்களை தாங்கும் திறன் கொண்ட வலுவான வீடுகளை கட்ட அதிபர் ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.

மே 3ம் தேதி எரிமலை வெடிக்கவில்லை என்றாலும், சாம்பல் பரவியதால் விமான நிலையம் மூடப்பட்டது.

இந்தோனேசியா அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை செயல்பாடுகளை எதிர்கொள்கிறது.