மிக பிரபலமான சீனா உணவகத்தில் சாப்பிட்ட 43 பேருக்கு உடல்நிலை சரியில்லை!! மூடப்பட்ட உணவகம்!!

மிக பிரபலமான சீனா உணவகத்தில் சாப்பிட்ட 43 பேருக்கு உடல்நிலை சரியில்லை!! மூடப்பட்ட உணவகம்!!

சிங்கப்பூரில், தாம்சன் பிளாசாவில் உள்ள பீச் கார்டன் உணவகம் உணவு உண்ட 43 வாடிக்கையாளர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, இதனையடுத்து, ஏப்ரல் 22 முதல் மூடப்பட்டது.அது பிரபல சீன உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சகம்(MOH) மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு(SFA) அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 8 பேருக்கு இரைப்பை குடல் அழற்சி ஏற்பட்டுள்ளது.

இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் இப்போது அவர்கள் சீராக உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீண்டும் திறப்பதற்கு முன், உணவகத்தை முழுமையாக சுத்தம் செய்து, சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.அதன்பிறகு தான் திறக்க வேண்டும்.

உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் திருப்திகரமாக இல்லாமல் இருந்தால், SFA யிடம் புகார் தெரிவிக்கலாம்.