உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிப்பு!! புராணங்களில் கூறப்படுவது உண்மையா?

உலகின் மிகப்பெரிய பாம்பு கண்டுபிடிப்பு!! புராணங்களில் கூறப்படுவது உண்மையா?

இந்தியாவில் குஜராத் மாகாணத்தில் உள்ள பண்டாரோ பகுதிக்கு அருகில் லிக்னைட் சுரங்கத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யும் போது மிகவும் நீளமான பாம்பு புதை படிவம் கண்டறியப்பட்டுள்ளது.இந்த பாம்பு உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாம்புகளின் புதை படிவங்களில் மிக நீளமானது. மேலும் இந்த பாம்பின் நீளம் 10 முதல் 15 மீட்டர் வரை இருக்க்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தப் பாம்பு 4.7 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கருதப்படுகிறது.

இந்த படிவத்தை ஐஐடி ரூர்க்கி பேராசிரியர்கள் சுனில் வாஜ்பேயி மற்றும் தேப் ஜீத் தத்தா உள்ளிட்டோர் கண்டுபிடித்தனர்.

இந்த பாம்பிற்கு “வாசுகி இண்டிகஸ்” என்று பெயரிடப்பட்டது.இந்த பெயருக்கான அர்த்தம் சிவபெருமானுடன் தொடர்புடையதை குறிப்பிடுகிறது.

மட்சோய்டே இனமானது பூமியில் காணப்பட்ட கோண்ட்வானா எனும் பேய் பாம்பு இனத்தை சேர்ந்தது.

இவை கிரெட்டேசியஸ் காலம் முதல் ப்ளீஸ்டோசீன் காலம் வரை வாழ்ந்ததாக கூறப்படுகிறது. 4.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இந்த பாம்புகள் வாழ்ந்திருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. 27 வெவ்வேறு புதை படிவங்களை ஆய்வு செய்ததில் அது மிகப்பெரிய பாம்பு என்று கூறப்படுகிறது.இதன் உடல் நீண்ட குழாய் போல் இருக்கும். இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் காணப்படும் வலைவடிவ மலைப்பாம்பு தற்பொழுது பூமியில் மிக நீண்ட காலம் வாழ்கின்ற இனம். ஆனால் அதன் நீளம் 6 புள்ளி 25 மீட்டர். இப்பொழுது கிடைத்துள்ள பாம்பின் படிவம் அதைவிட மிகப்பெரியது.

இந்தப் பாம்பு 1912 இல் கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிக்கப்பட்ட வாசுகி பாம்பு மிகவும் ஆக்ரோஷமான தன்மையை கொண்டிருக்காது என்றும்,தனக்கான உணவை வேட்டையாடி உண்டு வாழ்ந்து வந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.மேலும் இந்த புதை படிவம் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.