அவருடைய ஏடிஎம் அட்டை,கைத்தொலை பேசி உள்ளட்டவை அவரிடம் இருந்து திருடப்பட்டிருந்தன. பணமும் பல தவணைகளாக அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தீவிர விசாரணைக்கு பிறகு கொலை செய்த சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆண், இருவர் பெண்கள்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த வட்டாரத்தில் தொடர்ந்து குற்றச் செயல்கள் நிகழ்கிறது என்றும் தங்கும் விடுதியில் கண்காணிப்பு கேமரா போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கூட இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
பாதுகாப்பு நெறிமுறைகள் மேம்படுத்தப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.