சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள அதிரடி திரைப்படம்...!!!

இந்திய சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் மிகவும் பிரபலமான படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி.
மூன்றாவது வாரத்தைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்தப் படம், ரூ. 75 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைத் தொடர்ந்து, சசிகுமார் ‘ஃப்ரீடம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.இது ஜூலை 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.
“கழுகு”,”நான் மிருகமாய் மாறா “படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் மற்றும் லிஜோமோஸ் ஜோஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார்.
டூரிஸ்ட் பேமிலி படம் எப்படி இலங்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதோ அதேபோல இந்தப் படமும் 90களில் இலங்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
அதாவது, ராஜீவ்வை கொலை செய்வதற்காக அனுப்பப்பட்ட ஒரு மனித வெடிகுண்டு பெண்ணின் கதை என்பதை டீசரிலேயே அறிவித்திருந்தார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் ஃப்ரீடம் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் என்.பி. படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து,போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
