சிங்கப்பூரில் 141 வாகனங்கள் சிக்கியது! ஏன் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சிங்கப்பூரில் 141 வாகனங்கள் சட்ட விரோதமாக மாற்றி வடிவமைக்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை ஜூலை 2 வெளியிட்டது.
வாகனத்துக்குள் உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதை கூட பார்க்க முடியாத அளவிற்கு அனுமதிக்கப்பட்டதை விட அடர் கருநிற கண்ணாடி, அனுமதிக்கப்படாத வாகன எண் பலகை, அலங்கார விளக்குகள், புகை வெளியேற்றும் குழாய்,என பல மாற்றங்களை சட்ட விரோதமாக வாகனங்களில் செய்துள்ளனர்.
சிங்கப்பூர் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த வாகனங்கள் சிக்கியதாக தெரியவந்துள்ளது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கக்கூடிய புகையின் கடுமையான தன்மையை குறைக்கும் கருவி வாகனங்களில் இயந்திரம் ஏற்படுத்தும் சத்தத்தை குறைக்கும் கருவி ஆகியவற்றை அகற்ற ஓட்டுனர்களுக்கு அனுமதி இல்லை என்று One Motoring இணைய பக்கம் தெரிவித்தது.
குறைந்தது 70% ஒளி ஊடுருவும் தன்மையை வாகனத்தின் முன் கண்ணாடி மற்றும் கதவுகளில் உள்ள கண்ணாடிகளும் கொண்டிருக்க வேண்டும்.
வாகனத்தின் பின்பக்கம் உள்ள கண்ணாடி 25 விழுக்காடு ஒளி உடலுறவு கூடிய வகையில் இருக்க வேண்டும்.
இது போன்ற விதிமுறைகளை கடை பிடிக்காத குற்றத்திற்காக 2024 ஆம் ஆண்டில் ஏறத்தாழ நாலாயிரம் அபராதங்கள் விதிக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
2021 ஆம் ஆண்டுக்கும் 2024 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சட்டவிரோதமாக வாகனங்களை மாற்றி அமைக்க உதவிய 23 வாகன பட்டறைகளின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வாகனங்களை சட்ட விரோதமாக மாற்றி அமைக்கும் தனிநபர் வாகன பட்டறை உரிமையாளர் ஆகியோருக்கு அந்த வாகனத்தை பயன்படுத்தும் மூன்று மாதங்கள் வரை சிறை மற்றும் 5000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். இந்தக் குற்றத்தை தொடர்ந்து செய்தால் தண்டனை அதிகரிக்கும்.