முகலாய அரண்மனையில் பிறந்த ஜாங்கிரி.!! இந்த இனிப்பின் சுவாரசிய வரலாறு..!!

முகலாய அரண்மனையில் பிறந்த ஜாங்கிரி.!! இந்த இனிப்பின் சுவாரசிய வரலாறு..!!

முகலாய அரண்மனையில் பிறந்த ஜாங்கிரி, தமிழ்நாட்டில் மட்டுமல்ல,இந்தியா முழுவதும் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் இனிப்புகளில் ஜாங்கிரியும் ஒன்று.

இன்றைக்கும் நம் பாரம்பரிய இனிப்பாக மாறி இருக்கும் ஜாங்கிரிக்கு பின்னால் ஒரு சுவாரசியமான அரசைவை வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது.

இந்த கதையை அறிய முகலாயப் பேரரசு ஜஹாங்கீர் (1605-1627)காலத்திற்கு செல்ல வேண்டும்.

பேரரசர் ஜஹாங்கீர் உணவுப் பிரியர். தினமும் புதுப்புது சுவைகளை ருசிக்க விரும்பிய அவர், தனது அரண்மனையில் மீர் பகாவல் என்ற தலைமை சமையல் அதிகாரியை நியமித்தார்.

அவரின் கீழ் ஏராளமான சமையல் காரர்கள்கள், உதவியாளர்கள், பண்ட கசாலை பொறுப்பாளர்கள் பணியாற்றினர்.
மன்னருக்கு பரிமாறப்படும் ஒவ்வொரு உணவையும் முதலில் சுவைத்துப் பார்த்து ஒப்புதல் அளிக்க சாஷ்னிகீர் என்ற சிறப்பு அதிகாரியும் இருந்தனர்.

ஒரு நாள் மத்திய கிழக்கிலிருந்து அறிமுகமான ஜிலேபியை ஜஹாங்கீர் சுவைத்தார்.

ஆனால் அந்தச் சுவை அவருக்கு முழு திருப்தியைத் தரவில்லை.

இதைவிட அழகாகவும், சுவையாகவும் ஒரு புதிய இனிப்பை உருவாக்க வேண்டும் என்று மீர் பகவாலுக்கு ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.

பல நாட்கள் பல விதமான இனிப்புகளை தயாரிக்கப்பட்டனர், ஆனால் எதுவும் ஜஹாங்கீரின் மனதை கவரவில்லை.

அப்போது ஒரு நாள் மன்னரே சமையல் அறைக்குச் சென்றார். அ அங்கு சமையல்காரர்கள் கோதுமை மாவை துணியில் நிரப்பி, சிறு துளை வழியாக எண்ணெய்யில் சுருளாகப் பிழிவதைப் பார்த்தார்.
அதைப் பார்த்ததும் அவருக்கு ஒரு புது யோசனை தோன்றியது.
இது ரோஜா மலர் போல பூத்திருக்க வேண்டும்.வட்டச் சுருளாக அல்ல: பூவின் இதழ்களைப் போல அழகாக இருக்க வேண்டும் என்று சமையல்காரர்களிடம் கூறினார்.

அதன்படி,கோதுமை மாவுக்குப் பதிலாக உளுந்து மாவு பயன்படுத்தப்பட்டது. சர்க்கரைப்பாகில் குங்குமப்பூ, பன்னீர், கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டன.

பூவின் வடிவத்தில் உருவான அந்தப் புதிய இனிப்பு சுவையிலும் தோற்றத்திலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மறுநாள் அந்த இனிப்பு ஜஹாங்கீருக்கு பரிமாறப்பட்டது.
அதைச் சுவைத்த மன்னர் மிகவும் மகிழ்ந்து, சமையல்காரர்களுக்கு தங்க நாணயங்களையும் பரிசுகளையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அவரது நினைவாக அந்த இனிப்புக்கு ஜஹாங்கிரி என்று பெயரிடப்பட்டது.
பின்னர் முகலாயர்களின் செல்வாக்கு தென் இந்தியாவிற்குப் பரவியபோது, ஜஹாங்கிரி என்ற பெயர், மக்களின் உச்சரிப்பில் ஜாங்கிரி என்று மாறியது. இன்று அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. பல நூற்றாண்டுகளைக் கடந்தும், மன்னரின் சமையலறையில் பிறந்த அந்த இனிப்பு, இன்றும் இந்தியர்களின் பண்டிகை மகிழ்ச்சியின் பிரிக்க முடியாத பகுதியாகக் திகழ்கிறது.