சீனாவுடன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் கம்போடியா…!!!

சீனாவுடன் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் கம்போடியா...!!!

சீனாவும் கம்போடியாவும் கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளன.

இந்த மாதம் 28 ஆம் தேதி வரை சுமார் 1,000 சீன வீரர்களும் 1,300 க்கும் மேற்பட்ட கம்போடிய வீரர்களும் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்கின்றனர்.

இதில் நிலம், கடல் மற்றும் வான் போன்ற ராணுவ பயிற்சிகள் நடத்துவது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளன.

தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக கம்போடியா உள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஏப்ரல் மாதம் கம்போடியாவிற்கு அரசு முறையாக பயணம் மேற்கொண்டார்.

சீனாவிடமிருந்து கம்போடியா பில்லியன் கணக்கான டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது.

சீனா தனது செல்வாக்கை விரிவுப்படுத்த கம்போடிய கடற்படை தளங்களைப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.