அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் Vs லக்னோ அணிகள் மோதல்..!!

ஐபிஎல் கிரிக்கெட் 18-வது தொடரில் 10 அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் 64வது லீக் போட்டியில், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 12 போட்டிகளில் 9 வெற்றிகள், 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மேலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையும் பெற்றுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றில் மோதும். இந்தச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
தோல்வியடையும் அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். இதன் காரணமாக, குஜராத் அணி முதல் இரண்டு இடங்களில் பிடிக்க ஆர்வமாக உள்ளது. பெங்களூரு மற்றும் பஞ்சாப் (தலா 17 புள்ளிகள்) முதல் இரண்டு இடங்களுக்கான போட்டியில் நெருக்கமாக உள்ளன.
லக்னோ அணி 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
கடந்த போட்டியில் ஹைதராபாத்திடம் தோல்வியடைந்ததன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அந்த அணி இழந்தது. அவர்கள் தொடர்ந்து கடைசி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர்.
இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளதால் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக பார்க்கலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
