சாலையில் நடத்தப்பட்ட பந்தயத்தால் பறிபோன உயிர்..!!!ஓட்டுநருக்குச் சிறை தண்டனை...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆபத்தான முறையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் மீது நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமான ஓட்டுநர் நீதிமன்றத்தில் எந்தவித வருத்தத்தையும் காட்டவில்லை.
இதனால் அவருக்கு நேற்று (27 ஆம் தேதி) ஐந்து ஆண்டுகள் எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விபத்து எப்படி நடந்தது..??
கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி மாலை,30 வயதான பிரதிவாதியான ஜாரெட் டீ லீ கியாட், கிழக்கு கடற்கரை பூங்காவில் (ECP) தனது நண்பர்களுடன் ஒரு பயணத்தை ஏற்பாடு செய்தார்.
இதனால் பிரதிவாதி மற்றும் வின்சென்ட் லோவின் கார்களை எடுத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை பூங்காவில் சந்திக்க ஒப்புக்கொண்டனர்.