ஜாலான் மேராவிற்கு வந்த அழையா விருந்தாளி..!!! வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஜாலான் மேரா சாகா பகுதியில், கடந்த ஆண்டு கூடு கட்டிய சிவப்பு மார்பகக் கிளிகள் ஜோடி, இந்த ஆண்டும் அதே இடத்தில் கூடு கட்டி நான்கு குஞ்சுகளுடன் மீண்டும் தோன்றியுள்ளது.
இந்த அரிய காட்சியை புகைப்படம் எடுப்பதற்காக ஏராளமான புகைப்பட ஆர்வலர்கள் அந்த இடத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
கடந்த வாரம், “Singapore Wildlife Sightings” எனும் பேஸ்புக் குழுவில் ஒருவர், ஒரு மரப் பொந்துக்குள் கிளிகள் குடும்பம் சுறுசுறுப்பாக இயங்கும் வீடியோவையும் புகைப்படங்களையும் பகிர்ந்தார். அதில், கிளி தனது குஞ்சுகளுக்கு உணவைக் கொண்டு வந்து கொடுக்கும்போது, குஞ்சுகள் தங்களது சிறிய தலையை மரப் பொந்தில் இருந்து வெளியே நீட்டும் காட்சிகள் போன்றவை இடம்பெற்றிருந்தன.
ஒரு புகைப்படக் கலைஞர், கடந்த ஆண்டும் இதே கிளிகளை இந்த இடத்தில் புகைப்படம் எடுத்ததாகவும், இம்முறையும் அவை அதே இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளன எனவும் கூறினார். நான்கு குஞ்சுகள் இருக்கலாம் என அவர் குறிப்பிட்டாலும், மூன்று பறவைக் குஞ்சுகளையே அவர் படம் பிடித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், ஒரு நெட்டிசன் பகிர்ந்த மற்றொரு புகைப்படத்தில், ஒரு ஸ்டார்லிங் பறவை, குஞ்சுகளுக்குத் தாக்க முயலும் நிகழ்வும், அதனைக் கண்ட தாய் மற்றும் தந்தை கிளி தங்களது குஞ்சுகளை பாதுகாக்கும் நிமிடமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் பொது சேவை ஒருங்கிணைப்பு அமைச்சரும், ஜாலான் மேரா சாகா பகுதியில் குடியிருப்பாளர்களை சந்திக்கச் சென்றபோது, புகைப்படக் கலைஞர்களுடன் உரையாடிய வீடியோவையும் அமைச்சர் சான் சுன் சிங் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
அந்த பதிவில், “பிளாக் 111 இல் வண்ணமயமான புதிய குடியிருப்பாளர்கள் – பெருமைமிக்க கிளி தாய் மற்றும் அதன் அழகான குழந்தைகள்! ஒரு மனதைக் கவரும் காட்சி, இயற்கை எப்போதும் நம்மைச் சுற்றியே இருக்கிறது என்பதற்கான நினைவூட்டல்” என்று அவர் எழுதியிருந்தார்.
இந்த நிகழ்வு, நகர சூழலிலும் விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை நிலை நிலைத்திருப்பதை, பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
