ஏர் இந்திய விமான விபத்து: முதற் கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!
கடந்த மாதம் ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானமானது 242 பேருடன் புறப்பட்ட சில நொடிகளிலேயே ( 600 800 அடி உயரமே பறந்த நிலையில்) வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 275 ஆகும் இதில் ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார்.
இந்த விமான விபத்து குறித்து (AAIB) விமான விபத்து புலனாய்வு பணியகம் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்து வந்தது. இதன் முதல் கட்ட அறிக்கை இன்று (ஜூலை 12) நள்ளிரவில் வெளியான நிலையில், இந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது,
விமானத்தின் இரண்டு என்ஜின்களின் எரிபொருள் கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் நிறுத்தப்பட்டிருந்ததே (off நிலையில்) காரணம் என தெரியவந்துள்ளது.
மேலும் விமானத்தின் ஒரு விமானி மற்றொரு விமானியிடம் ஏன் இந்த சுவிட்ச் நிறுத்தப்பட்டுள்ளது?? என்ற கேள்வி எழுப்பியதும் இந்த விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ளதாகவும் அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டை உழுக்கிய இந்த கொடூர சம்பவத்திற்கு விமானிகளில் கவனக்குறைவே காரணமா!! என்று மக்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது.