ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!! VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்....!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் உள்ள ஜொகூர் பாரு VEP (Vehicle Entry Permit) பதிவு மையத்தில், சிங்கப்பூரில் உள்ள வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மலேசியா இன்று ஜூலை (1) முதல் வெளிநாட்டு வாகன நுழைவு அனுமதி (VEP) நடவடிக்கையை அமல்படுத்தியது.
VEP என்பது சிங்கப்பூரில் உள்ள வாகனங்கள் மலேசியாவில் நுழையும் போது, அவற்றை பதிவுசெய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் ஒரு ஒப்பந்தமாகும்.
இந்த பதிவு, புறநகர் வாகனங்களுக்கு சாலைப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கிறது.
சிங்கப்பூர் மற்றும் மலேசியா எல்லையில் அதிகமான போக்குவரத்து உண்டு.மேலும் சில சட்டங்களின் படி, வாகன உரிமையாளர்கள் VEP அனுமதி பெற வேண்டும்.இல்லையென்றால் தேவையில்லாத அபராதங்களை சந்திக்கக்கூடும்.
அவர்கள் மலேசிய நிலப் போக்குவரத்துத் துறை கவுண்டர், மொபைல் கவுண்டர் அல்லது MyEG வலைத்தளம் மூலம் அபராதத்தைச் செலுத்தி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் தொடர்புடைய பதிவு நடைமுறைகளை முடிக்க வேண்டும்.