துப்பாக்கி சூடு நூல் நிலையில் உயிர் தப்பியவர்!
எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
துப்பாக்கி சூடு நூல் நிலையில் உயிர் தப்பியவர்! எங்கு என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் சாமர்த்தியமாக யோசித்த ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பி உள்ளார்.
கெம்பாங்சான் சுங்கை நியோர் என்ற பள்ளிக்கூடத்துக்கு வெளியே ஜூலை 1ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் காரில் அமர்ந்து இருந்த ஆடவரை நோக்கி இரண்டு சந்தேக ஆடவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
முகத்தை மூடி இருந்த ஆடவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டு காரின் அருகில் வந்தனர்.
அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கி எடுத்து ஓட்டுனர் பக்கம் இருந்த ஜன்னலை நோக்கி பலமுறை சுட்டார் அதிர்ஷ்டவசமாக ஆடவர் காயம் இன்றி உயிர்த்தப்பினார் அவரது காருக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது.
காரில் அமர்ந்த வாரே அவர்கள் துப்பாக்கியை எடுப்பதை அறிந்தவர் தனது இருக்கையை பின்பக்கம் அடக்கினார் அந்த சமயத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தேறியது.
சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததால் சிறு காயம் கூட இல்லாமல் உயிர் தப்பிவிட்டார்.
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். மலேசிய காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.