உங்க வாட்ஸ்அப்- இன்ஸ்டா திடீர்னு டவுன் ஆகுதா..?? அதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்கங்க..!!

உங்க வாட்ஸ்அப்- இன்ஸ்டா திடீர்னு டவுன் ஆகுதா..?? அதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்கங்க..!!

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற செயலிகள் திடீரென வேலை செய்யாமல் போவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.

மெசேஜ் அனுப்பினால் செல்லாமல் இருப்பது, ஆப் தானாக மூடுவது, கணக்கு உள்நுழைவு பக்கம் மட்டும் தோன்றுவது போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

சமீபத்தில் வாட்ஸ்அப் வெப் மற்றும் கணினி வெர்ஷன் பல நாடுகளில் செயலிழந்தது பயனர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இது போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏன் திடீரென நடக்கின்றன என்பது பலருக்கும் இன்னும் புரியாத கேள்வியாகவே இருக்கிறது.

இதற்கான முக்கிய காரணம் சர்வர் அவுட்டேஜ் (Server Outage). வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற பெரிய செயலிகளின் பின்னால் ஆயிரக்கணக்கான சக்திவாய்ந்த சர்வர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் ஒரே நேரத்தில் அந்த ஆப்பை பயன்படுத்தும் போது இந்த சர்வர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படும்.

குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள், பண்டிகைகள் அல்லது முக்கிய உலக நிகழ்வுகளின் போது ஆப் பயன்பாடு திடீரென உயர்ந்தால் சர்வர் அதீத அழுத்தத்திற்கு உள்ளாகி செயலிகள் முடங்கிவிடும்.

சில நேரங்களில் பிரச்சினை சர்வரில் இல்லாமல் நமது இணைய இணைப்பிலேயே இருக்கலாம். நெட்வொர்க் பலவீனம்( Weak Network), கேச்சி தொல்லை(Cache Problem), போன் நினைவகம் நிரம்பி(Storage Full) இருப்பது போன்ற காரணங்களாலும் ஆப் செயலிழக்கும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK