ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி : சிங்கப்பூர் வெற்றி..!!

ஆசியக் கோப்பை - 2027 கால்பந்து போட்டி : சிங்கப்பூர் வெற்றி..!!

ஆசியக் கோப்பை 2027 கால்பந்து போட்டிக்கான  இறுதி தகுதிச் சுற்றானது நேற்று (மார்ச் 31) இரவு 8 மணி அளவில் சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த இறுதி தகுதிச் சுற்று ஆட்டத்தில்  சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதியது. போட்டியின் இறுதியில் பங்களாதேஷை வீழ்த்தி சிங்கப்பூர் அணியானது 1 – 0 என்ற அளவில் அபார வெற்றி அடைந்துள்ளது.

ஆட்டம் தொடங்கி 32 வது நிமிடத்தில் சிங்கப்பூர் அணி  தனது முதல் கோலை அடித்தது. ஹாரிஸ் ஸ்டீவார்ட் (Harhys Stewart) தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினர்.

சிங்கப்பூர் அணியை எதிர்த்து பங்களாதேஷ் வீரர்களும் கடுமையான சவால்களை கொடுத்தனர். இருப்பினும் பங்களாதேஷ் வீரர்கள் அவர்களது சில வாய்ப்புகளை தவறவிட்டனர்.

சிங்கப்பூர் அணியின் விளையாட்டை எதிர்கொள்ள முடியாமல் பங்களாதேஷ் வீரர்களால் கோலை போட முடியவில்லை.

சிங்கப்பூர் வெற்றியின் காரணமாக, சிங்கப்பூர் அணியின் கால்பந்து ரசிகர்கள் வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

இந்த கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு 30,105 ரசிகர்கள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்து நேரில் போட்டியைக் கண்டு களித்தனர்.

2 அணி ரசிகர்களும் வீரர்களை உற்சாகப்படுத்தினர். குறிப்பாக பங்களாதேஷ் அணி ரசிகர்கள் அரங்கையை அதிர வைக்கும் விதமாக ஆரவாரம் செய்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்பும், இடைவெளிகளின் போதும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

2027-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை உலக போட்டியில் சிங்கப்பூர் அணியானது ஏற்கனவே தகுதி பெற்றிருந்த நிலையில், இந்த போட்டியானது சிங்கப்பூர் அணிக்கு சிறந்த பயிற்சியாக அமைந்தது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK