சிங்கப்பூருக்கு TEP பாஸில் செல்பவர்கள் கவனத்திற்கு!!

சிங்கப்பூருக்கு TEP பாஸில் செல்பவர்கள் கவனத்திற்கு!!

சிங்கப்பூரில் பலவிதமான பாஸ்கள் இருந்தாலும் தற்சமயம் அதிகமாக எளிதாகவும் சிங்கப்பூர் செல்ல பலரும் பயன்படுத்துவது TEP PASS . TEP PASS என்பது Temporary Employment Pass. இந்த பாஸில் சென்றால் நீங்கள் சிங்கப்பூரில் மூன்று மாதம் இருக்கலாம். இது மிகவும் எளிதாக கிடைப்பதாலும், சம்பளம் சற்று அதிகமாக இருப்பதாலும் பலரும் இதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் இதில் பல பிரச்சினைகளும் பல ஏமாற்று வேலைகளும் நடக்கிறது.குறிப்பாக இந்தியாவில் இருக்கும் பல ஏஜென்ட்கள் இதை வைத்து அதிகமாக சம்பாதிக்கிறார்கள் . ஆனால் சிங்கப்பூர் செல்லும் நபர் மோசடி வலையில் விழுகின்றனர் ,ஏமாற்றப்படுகின்றனர்.

சிங்கப்பூர் செல்லும் போது குறிப்பாக TEP பாஸில் செல்லும் போது நீங்கள் கவனிக்க வேண்டியது .

உங்கள் சம்பளம் மற்றும் நீங்கள் கட்டும் ஏஜென்டின் கமிஷன் தொகை :

நீங்கள் உங்கள் இரண்டு மாத சம்பளத்தை மட்டுமே ஏஜென்டிடம் கமிஷனாக கட்டினால் உங்களுக்கு லாபம் தான் . பல ஏஜென்ட்கள் அதிகமான தொகையை கிட்டத்தட்ட மூன்று மாத உங்கள் சம்பள அளவு தொகையை வாங்குகிறார்கள்.

இதுபோன்று அதிகமான தொகையை வாங்கினார்கள் என்றால் சிங்கப்பூருக்கு சென்று நீங்கள் எதுவும் சம்பாதிக்க முடியாது உங்களுக்கு நட்டமே மிஞ்சும்.

அது மட்டும் இல்லாமல் நீங்கள் TEP PASS இல் சென்றால் மூன்று மாதங்கள் மட்டுமே சிங்கப்பூரில் இருக்க அனுமதி உண்டு. ஆனால் அதை நான்கு மாதம் வரை நீடிக்கிறார்கள். நான்கு மாதம் வரை நீட்டிப்பதை ஒரு சிலர் ஐந்து, ஆறு மாதம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

சில சமயங்களில் TEP PASS இல் உங்களை அங்கு நாங்கள் அனுப்புகிறோம். அங்கு சென்று உங்கள் வேலையை பார்த்துவிட்டு உங்கள் முதலாளி S PASS மற்றும் E PASS வாங்கி தருவார் என்று சொல்லி ஐந்து லட்சம் முதல் ஆறு லட்சம் வரை பணம் கேட்கிறார்கள்.ஆனால் நீங்கள் TEP PASS இல் சென்றால் நிச்சயமாக S PASS,E PASS கிடைக்குமா என்றால் அது கேள்விக்குறி தான்.

இது போன்று கூறி ஏமாற்றுபவர்களை நம்பி ஏமாறாமல் குறைந்த தொகையாக இருந்தால் மட்டுமே நீங்கள் TEP pass ல் செல்வது நல்லது.

முடிந்தவரை TEP Pass ஐ தவிர்ப்பது நல்லது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan