தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ள பில் கேட்ஸ்!!

தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ள பில் கேட்ஸ்!!

Microsoft இன் நிறுவனர் திரு Bill Gates அடுத்த 20 ஆண்டுகளில் அவரது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய வுள்ளதாக கூறியுள்ளார்.

அதனை தனது அறக்கட்டளையின் மூலமாக செய்யப்போவதாக அவர் கூறினார் .

அறக்கட்டளையின் செயல்பாடுகளை 2045 ஆம் ஆண்டில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“என் இறப்பிற்கு பிறகு பலர் என்னைப் பற்றி விமர்ச்சிக்கக்கூடும். ஆனால் ஒரு போதும் நான் செல்வந்தராக இறந்தேன் என்று கூற வாய்ப்பு தர மாட்டேன்” என்றார்.

69 வயதுடைய திரு கேட்ஸ் இதுவரை சுமார் 100 பில்லியன் டாலரைச் சுகாதார,வளர்ச்சி திட்டங்களுக்கு அளித்திருப்பதைக் குறிப்பிட்டார்.

அந்தப் பணிகளுக்காக அறக்கட்டளை அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 200 பில்லியன் டாலரை செலவிடும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.