பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!!

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை...!!!

பிரேசில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவில் அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.

மொபைல் போன்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால் கவனச் சிதறல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

தொடக்கப் பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரையிலான மாணவர்களுக்குப் பொருந்தும் இந்தச் சட்டம் பிரேசிலில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

நெருக்கடி அல்லது ஆபத்து, கல்விப் பணி போன்ற குறிப்பிட்ட நேரங்களில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

தேவைப்படும் உடல் ஊனமுற்ற நபர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படும்.

சிறுவயதிலேயே குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்குவதால் பெற்றோர்களால் அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடிவதில்லை.

பள்ளிகளில் செல்போன் கட்டுப்பாடுகள் அதற்கு உதவும் என்று பிரேசில் கல்வி அமைச்சர் கூறுகிறார்.

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருமனதாக புதிய மசோதாவை ஆதரித்தன.

பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பெற்றோர்களும் வரவேற்கின்றனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ உட்பட சில மாநிலங்கள் ஏற்கனவே பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளன.

ஆனால் அதை செயல்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது.

சாவ் பாவ்லோ நகர அதிகாரிகள் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் செல்போன்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யலாமா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg