தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வேலைக்கு செல்ல நினைக்கும் இளைஞர்களிடம் RMI மற்றும் Avanz எடுத்து தருவதாக ஏமாற்றும் ஏஜெண்டுகள்!!!

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வேலைக்கு செல்ல நினைக்கும் இளைஞர்களிடம் RMI மற்றும் Avanz எடுத்து தருவதாக ஏமாற்றும் ஏஜெண்டுகள்!!!

🔵வாழ்க்கையில் முன்னேறுவதற்காக பல இளைஞர்கள் வெளிநாடு செல்ல விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவிற்கு மிகவும் அருகில் இருக்கும் பாதுகாப்பான நாடான சிங்கப்பூர் செல்ல பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

🔵இதை பல ஏஜெண்டுகள் அவர்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

🔵சிங்கப்பூரில் தற்பொழுது ஒரு சில வேலைகளுக்கு RMI அல்லது Avanz தேவைப்படுகிறது.


🔵RMI or Avanz என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனம் நீங்கள் கொடுக்கும் சான்றிதழ் உண்மைதானா? என்று கண்டறிந்து அது உண்மை என்றால் அதற்கான ஒரு சான்றிதழ் தருவார்கள். அதை வைத்து நீங்கள் வேலை தேடினால் உங்களுக்கு வேலை கிடைக்கும்.

🔵இதை ஏஜெண்டுகள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்.

📌எப்படி என்றால்?
👉சிங்கப்பூருக்கு நீங்கள் E-Pass ல் சென்றால் மட்டுமே RMI or AVANZ தேவைப்படும். ஆனால் ஒரு சில ஏஜெண்டுகள் நீங்கள் எந்த பாசில் சிங்கப்பூர் சென்றாலும் இது தேவை என்று சொல்லி இதற்காக ஒரு தொகையை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.


👉Degree மற்றும் Master Degree முடித்தவர்கள் மட்டுமே இதை எடுக்க வேண்டும். ஆனால் ஏஜெண்டுகள் Diploma, ITI படித்தவர்களை கூட இந்த சான்றிதழை எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.

👉ஒரு சில ஏஜெண்டுகள் வேலை வாங்கித் தருவதாக கூறி இந்த சான்றிதழை மட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டு அதற்காக ஒரு தொகையை கமிஷனாக வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தருவது கிடையாது.


👉சில ஏஜெண்டுகள் மிகவும் அதிகமான தொகையை இதற்காக கமிஷனாக வாங்குகின்றனர்.


👉நீங்கள் இந்த சான்றிதழை எடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் ஏதாவது தவறு செய்து விட்டால் உங்களுக்கு இந்த சான்றிதழ் கிடைக்காமல் போகலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK