கேலாங்கில் கடை மீது மோதிய கார்…!!!66 வயது மூதாட்டி உயிரிழப்பு…!!!

கேலாங்கில் கடை மீது மோதிய கார்...!!!66 வயது மூதாட்டி உயிரிழப்பு...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கார் பகிர்வு தளமான GetGo-விலிருந்து வந்த ஒரு கார் கேலாங்கில் உள்ள ஒரு இரவு சந்தைக் கடையின் மீது மோதியதில், 66 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

40 வயது ஆண் ஓட்டுநரை ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் போலீசார் கைது செய்தனர்.

சமூக ஊடக தளமான SGRV FRONT MAN-இல் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், ஒரு கருப்பு நிற GetGo கார் ஒரு இரவு சந்தைக் கடையின் மீது மோதியதைக் காட்டியது.

இதனால் அந்த இடம் முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடப்பதை காணலாம்.

நேற்று முன்தினம் (11 ஆம் தேதி) இரவு 11:45 மணியளவில் சர்க்யூட் சாலையில் உள்ள பிளாக் 52A அருகே நடந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

66 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உறுதிப்படுத்தினர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan