சிங்கப்பூரில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடிச் சென்ற கார் டிரைவர்!!

சிங்கப்பூரில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடிச் சென்ற கார் டிரைவர்!!

சிங்கப்பூர்:சிலேத்தார் விரைவுச்சாலையில் நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜூன் 21 காலை நடந்த இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

மத்திய விரைவுச் சாலைக்குச் செல்லும் சிலேத்தார் விரைவுச் சாலையில் ஒரு கார், ஒரு டாக்ஸி மற்றும் ஒரு வேன் மோதிய விபத்து குறித்து காலை 10 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிலேத்தார் விரைவுச்சாலையின் சிலேத்தார் வெஸ்ட் வெளியேறும் இடத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

63 வயதான டாக்ஸி ஓட்டுநரும் அவரது பயணியும் சுயநினைவுடன் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இந்த விபத்து குறித்த காணொளியானது Roads.SG பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.

அந்த காணொளியில் கருப்பு நிற கார் ஒன்று சேதமடைந்திருப்பதை காணலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan