அப்பொழுது சாலையில் விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த 85 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) வெள்ளிக்கிழமை 27ஆம் தேதி சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அறிக்கையின் படி , ஆய்வு செய்யப்பட்ட வாகனங்கள் ஒற்றை வெள்ளை கோடுகள் இரட்டை வெள்ளை கோடுகள் இரட்டை மஞ்சள் கோடுகள் கொண்ட சாலைகள் மற்றும் நடைபாதைகளில் விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிட்டு இருந்தது.
குற்றவாளிகள் மீது LTA தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நீங்கள் விதிமுறைகளை மீறினால் அபராதம் அல்லது தகுதி இழப்பு புள்ளிகளை எதிர்கொள்ள நேரிடும். முதல் முறை குற்றம் செய்தால் 300 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோருக்கு அதிக தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.