E PASS ,S PASS இதில் எது சிறந்தது?

சிங்கப்பூருக்கு செல்ல E PASS,S PASS,NTS PERMIT,WORK PERMIT,PCM PERMIT என பல பாஸ்கள் உள்ளன.அதில் E PASS ,S PASS இல் எது சிறந்தது? இப்பதிவில் தெளிவாக காண்போம்.
ஒவ்வொரு பாஸ்களுக்கும் குறிப்பிட்ட விதிகளை MOM நிர்ணயித்துள்ளது.அந்த பாஸ்களில் வரும் வெளிநாட்டவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்? Quota , லெவி என அனைத்தையும் மனிதவள அமைச்சகம் நிர்ணயித்திருக்கும்.அந்த விதிமுறைகளின் படியே நிறுவனங்கள் ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
E PASS , S PASS சம்பளம் :
E PASS என்பது Employment visa . E PASS க்கான குறைந்தபட்ச சம்பளமாக $5500 வெள்ளி முதல் $6000 வெள்ளி வரை நிறுவனங்கள் வழங்க வேண்டும்.E PASS ஐ விட S PASS க்கு குறைவான சம்பளம் கிடைக்கும்.
E PASS வைத்திருப்பவர்கள் Dependant pass இல் அவர்களின் குடும்பங்களை சிங்கப்பூருக்கு அழைத்து வர முடியும்.S PASS வைத்திருப்பவர்களும் அழைத்து வர முடியும்.ஆனால் E PASS இல் சம்பளம் அதிகமாக இருப்பதால் எளிதாக Dependant pass இல் குடும்பங்களை அழைத்து வர முடியும்.
MOM யின் விதிகளை அனைத்து கம்பெனிகளும் பின்பற்றுகிறதா? என்பது கேள்விக்குறியே.
E PASS,S PASS இல் அப்ளை செய்த ip இல் அதிகமான சம்பளம் குறிப்பிடப்பட்டிருக்கும்.ஒரு சில கம்பெனிகள் அதே சம்பளத்தை கொடுக்காமல் குறைவான சம்பளத்தையே வழங்குகிறார்கள்.
நீங்கள் எந்த pass இல் செல்கிறீகளோ tax யார் கட்ட வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கு மட்டுமே tax கட்ட வேண்டுமா? என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.குறைவான சம்பளம் மற்றும் tax பிரச்சனை வருவதாலும் S PASS சிறந்ததாக எண்ணலாம்.ஆனால் mom யின் விதிமுறைகளின்படி E PASS சிறந்தது.
E PASS க்கு கட்டணமாக ஆறு லட்சம் முதல் எட்டு லட்சம் வரை ஏஜென்ட்கள் கேட்கிறார்கள்.S PASS க்கு நான்கு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை கேட்பார்கள்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் எந்த பாஸ் சிறந்தது என்று பார்ப்பதில்லை.எப்படியாவது சிங்கப்பூர் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.எது சிறந்தது என்று நினைத்து காத்திருந்தால் கடினம் தான்.
எந்த பாஸ்ஸாக இருந்தாலும் சம்பளம் எவ்வளவு?உணவு,தங்குமிடம் குறித்து பாருங்கள்? .கட்ட வேண்டிய பணம் குறைவாக இருந்து சம்பளம் நீங்கள் நினைத்தபடி இருந்தால் தாராளமாக நீங்கள் சிங்கப்பூர் செல்லலாம். E PASS ,S PASS இல் முயற்சிக்கும் போது உணவு ,தங்குமிடம் நீங்களே பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினால் சம்பளம் அதிகமாக இருந்தால் மட்டுமே சிங்கப்பூர் செல்லுங்கள்.உணவு,தங்குமிடம்,போக்குவரத்து ஆகிய செலவுகளை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினால் நீங்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி அந்த செலவுகளுக்கே போய்விடும்.உணவு அல்லது தங்குமிடம் அல்லது போக்குவரத்து செலவு என ஏதேனும் ஒன்றையாவது கம்பெனி வழங்கினால் அல்லது அதற்கு ஆகும் செலவை கம்பெனியே கொடுப்பார்கள் என்பது போன்ற வேலை வாய்ப்புகளும் வரும்.
நீங்கள் செலவு செய்த பணத்தை அதிகபட்சம் 8 அல்லது 9 மாதங்களுக்குள் எடுக்குற அளவுக்கு சம்பளம் இருந்தால் மட்டுமே செல்லுங்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan

