பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலி : 48 சுற்றுலாத் தலங்களை மூடியுள்ள இந்தியா!!

பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலி : 48 சுற்றுலாத் தலங்களை மூடியுள்ள இந்தியா!!

காஷ்மீரில் நேற்று (ஏப்ரல் 29) முதல் பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.87 சுற்றுலாத் தலங்களில் 48 தலங்களை மூட இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்படுவதாக Reuters செய்தி கூறுகிறது.

அந்த சுற்றுலாத் தலங்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் இல்லை .

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை இந்திய அரசாங்கம் அடையாளங் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்துக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.பதற்றமான சூழலே நிலவி வருகிறது.