“தொழிலாளர்களின் பாதுகாப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” - மனிதவள அமைச்சர் டான் சீ லெங்

குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் ஆன்லைன் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களின் நலன்களையும் சிறப்பாகப் பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அர்ப்பணிப்பை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தனது மே தினச் செய்தியில் எடுத்துரைத்தார்.
ஊழியர் நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வேலைப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் படிப்படியாக அதிகரிக்கும் சம்பள முறை மூலம் ஊழியர்களின் தரத்தை நிலையான முறையில் மேம்படுத்த நிறுவனம் எடுக்கும் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.
கூடுதலாக, தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டு முயற்சியும் உதவுவதாக டாக்டர் டான் கூறினார்.
இணைய ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் உலகின் முதல் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்றும் அவர் தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டார்.
ஆன்லைன் தொழிலாளர்களைப் பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ், டாக்ஸி ஓட்டுநர்கள், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் சுய சேவை டெலிவரி தொழிலாளர்களுக்கு சிறந்த சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறினார்.
கடந்த ஆண்டு வேலை இடங்களில் காயமடைந்தோரின் விகிதம் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், பாகுபாட்டிற்கு எதிரான நமது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் நியாயமான வேலைவாய்ப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் தனது மே தினச் செய்தியில் குறிப்பிட்டார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan