கடந்த 2024 ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் இவ்வளவு பயணிகளைக் கையாண்டுள்ளதா?
சிங்கப்பூர் : கடந்த ஆண்டு (2024) சாங்கி விமான நிலையம் 67.7 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.கோவிட்-19 தொற்று நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது இது 99.1 சதவீதம்.
இது குறித்து போக்குவரத்து அமைச்சர் Chee Hong Tat தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு(2025) சாங்கி விமான நிலையம் வழியாகச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கோவிட்-19 தொற்று நோய்க்கு முன்பு இருந்ததுடன் ஒப்பிட்டால் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.