சிங்கப்பூரில் சோதனையின் போது காரில் தப்பி ஓட முயன்ற பெண்களை துரத்தி பிடித்த காவல்துறை!!
சையிது அல்வி ரோட்டில்(Syed alwi Road) நேற்று அதிகாலை 5:45 மணியளவில் சந்தேகத்துக்குரிய வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை காவல்துறை சோதனை செய்தனர்.
ஒரு பெண் காரில் இருந்து தப்பி ஓட முயன்றார் அந்தப் பெண்ணை காவல்துறை துரத்தி பிடித்தது.
அப்பொழுது காருக்குள் இருந்த பெண் காரை வேகமாக ஓட்டி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அவருடன் மற்றும் ஒரு பெண் இருந்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பெண் வேகமாக ஓட்டிச் சென்ற கார் ஒரு லாரியுடன் மோதியது.இதன் முடிவில் இரண்டு பெண்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் 23 மற்றும் 25 வயது உடையவர்கள்.
காரில் போதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதின் அடிப்படையில் அவர்கள் மூவரும் போதை பொருட்களை பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.