மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! ரிட்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு..!!!
மலேசியா:மலேசியாவின் சபா கடற்கரை பகுதியில் இன்று (23.02.26)அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தின் மையம் மிக ஆழத்தில் இருந்ததால் சுனாமி அபாயம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, அதிகாலை 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது. சபாவின் தலைநகரான கோட்டா கினாபாலுவிலிருந்து வடகிழக்கே 100 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில், சுமார் 620 கிலோமீட்டர் ஆழத்தில் அதன் மையம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் ஆழம் அதிகமாக இருந்ததால், தரைமேற்பரப்பில் தாக்கம் குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான சொத்து சேதங்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம்,சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. கடலோர பகுதிகளில் அச்சம் தேவையில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மறுபுறம்,மலேசிய வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தை 6.8 ரிக்டர் அளவாக மதிப்பிட்டுள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.