பிடோக்கில் சாலை விபத்து..!!! சாட்சியங்களை தேடும் நண்பர்கள்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!!

பிடோக்கில் சாலை விபத்து..!!! சாட்சியங்களை தேடும் நண்பர்கள்...!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்...!!!

சிங்கப்பூர்: பிடோக் வடக்கு சாலையில் மோட்டார் சைக்கிள் சறுக்கிய விபத்தில் 38 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் காவல்துறைத் தகவலின்படி, ஜூலை 18ஆம் தேதி இரவு 10:55 மணியளவில், நியூ சாங்கி சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் விபத்து நடந்தது.

விபத்தில் பாதிக்கப்பட்ட முகமது ஃபைரூஸ் என்பவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது சறுக்கி விழுந்ததாக நம்பப்படுகிறது.மயக்கநிலையில் அவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது,பின்னர் உயிரிழந்தார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து,அவரது நண்பர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அந்த நேரத்தில் அருகிலிருந்த சாட்சிகள் தங்கள் டேஷ்கேம் அல்லது சிசிடிவி காட்சிகளை பகிர வேண்டுமெனக் கேட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan