ஒரு டீஸ்பூன் பூசணி விதைகளில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா…???

ஒரு டீஸ்பூன் பூசணி விதைகளில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா...???

பூசணி விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பூசணிக்காயை விரும்பாதவர்கள் அவற்றின் விதைகளை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். பூசணி விதைகள் ஆண்களின் விந்தணு தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்றன.

பூசணி விதைகளில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் நல்ல கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. பூசணி விதைகளை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகின்றன.

பூசணி விதை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்:-

🔶️ வறுத்த பூசணி விதைகளை தினமும் சாப்பிடுவது உங்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும். அவற்றில் உள்ள மெக்னீசியம் உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

🔶️ பூசணி விதைகளில் உள்ள மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.

🔶️ பூசணி விதைகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும்.பூசணி விதை பொடியை தினமும் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

🔶️ ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பூசணி விதைகளை சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

🔶️ உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க வறுத்த பூசணி விதைகளை சாப்பிடலாம்.

🔶️ தினமும் இரவில் ஒரு ஸ்பூன் பூசணி விதைகளை சாப்பிடுவதால் தூக்கமின்மையை சரி செய்யலாம்.


🔶️ உடல் சூட்டைக் குறைக்க தினமும் ஒரு டீஸ்பூன் பூசணி விதைகளை வறுத்து சாப்பிடலாம்.

🔶️ வயிற்றுப் பூச்சிகள் முழுவதுமாக நீங்க பூசணி விதைகளை சாப்பிடலாம்.

🔶️ பூசணி விதைப் பொடியை தினமும் பாலில் கலந்து குடிப்பதால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

🔶️ ஆண்கள் மலட்டுத்தன்மையிலிருந்து மீள பூசணி விதைகளை சாப்பிடலாம்.

🔶️ பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும் பூசணி விதை உதவுகிறது.