கழுதைப்புலிகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!!

கழுதைப்புலிகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!!

✨️ புலியைப் போல முகத்தோற்றமும் பின்னங்கால் வலுவிழந்து நடப்பதாலும் இதற்கு கழுதைப்புலி என பெயர் வந்திருக்கலாம்.

✨️ கழுதைப்புலி ஒரு அனைத்துண்ணி விலங்காகும்.

✨️ இது புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக இரைதேடும்.

✨️ கழுதைப்புலிக்கு நினைவுத்திறன் அதிகமாம்.

✨️ உலகில் மொத்தம் நான்கு வகையான கழுதைப்புலிகள் உள்ளன.

✨️ எலும்புகளை கூட அரைத்து தின்னும் அளவிற்கு இதன் தாடைகள் வலிமையானது.

✨️ ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த புள்ளிகள் கொண்ட கழுதைப்புலி எதிரிகளைப் பார்த்தால் அச்சத்தில் சிரிப்பது போன்ற ஒலியை எழுப்புமாம்.

✨️ கழுதைப்புலிகள் வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும்.

✨️ கழுதைப்புலிகள் இரண்டு மூன்று வருடங்களில் பருவமடைந்து விடும்.


✨️ இதன் கர்ப காலம் 88 முதல் 92 நாட்களாகும். இது குட்டியை பெரும்பாலும் குகைகளில் ஈன்றெடுக்கும்.

✨️ இந்தியா,ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன.

✨️ இந்தியாவில் காணப்படும் கழுதைப் புலிகள் 1.2-1.45 மீட்டர் உயரமும்,26-41 கிலோ எடையும் கொண்டதாக இருக்கும்.

✨️ இது ஒரே இடத்தில் வசிக்காது ஒரு நீர் நிலையில் இருந்து மற்றொரு நீர் நிலையை தேடி அலைந்து கொண்டே இருக்கும்.

✨️ கழுதைப்புலிகள் முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி வனச்சரகம்,வெலவாடார் தேசிய பூங்கா, சத்தியமங்கலம் காடுகள் போன்றவற்றில் காணப்படுகின்றன.

✨️ கழுதைப்புலிக்கு என்புதின்றி, கடுவாய், கொடுவாய்,தரக்கு, புலிக்குடத்தி, கழுதைக்குடத்தி,கழுதைக்குறத்தி,வங்கு என பிற பெயர்களும் உண்டு.

✨️ இதன் மயிர் அடர்த்தியான வால்கள் பின்னங்கால் வரை நீண்டவை.

✨️ மற்ற விலங்குகளை பயமுறுத்துவதற்காக உடலில் உள்ள முடிகளை சிலிர்த்து காட்டும்.

✨️ வேட்டையாடும் திறன் கொண்டிருந்தாலும் மற்ற விலங்குகள் கொன்று தின்ற மிச்சத்தையே உண்ணும்.