பத்து வயது சிறுமிக்கு இவ்வளவு பெரிய விருதா!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
சியா ஸீ என் தனது மூன்று வயதிலேயே தம் பெற்றோருடன் மெக்பர்சனில் உள்ள வாடகை வீடுகளில் வசிக்கும் மூத்த குடிமக்களை சந்தித்து லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ் அமைப்பின் தொண்டூழியப் பணிகளை செய்தும் அதன் ஒரு பகுதியாக அவர்களிடம் நலன் விசாரித்தும் வந்துள்ளார்.
ஏழு வயதில் சமூக சேவை துறையில் பணிபுரியும் தன் தாயாரால் ஈர்க்கப்பட்டு சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தில் தனது முறையான தொண்டூழிய பயணத்தை தொடங்கியதும் நம்மை வியப்புக்கு ஆளக்கியுள்ளது.
அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சங்கத்தின் நிதி திரட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அங்கு பொட்டலமிடுதல், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், பதிவு செய்தல் ஆகியவற்றில் உதவி இருக்கிறார்.
நிதி திரட்டும் ஓட்டங்களில் புற்று நோயாளிகளுக்காக 8,000 வெள்ளிக்கு மேல் நிதி திரட்டியும் உதவியுள்ளார்.
டாவ் நான் பள்ளி மாணவியான ஸீ என். 37 பள்ளிகளை சேர்ந்த 84 இளம் தனி நபர்களில் ஒருவராக சனிக்கிழமை ஜூலை 5 சிங்கப்பூர் சைலன்ட் ஹீரோஸ் மாணவர் விருதை பெற்றார்.
சிங்கப்பூர் குடிமக்கள் சங்கத்தால் 2023 ல் தொடங்கப்பட்ட இந்த விருது பரிவு சுயநலமின்மை மன உறுதியுடன் முன் நின்று செயல்பட்ட மாணவர்களை அங்கீகரிக்கிறது.
நன்கொடை திரட்டுவது மூத்த குடி மக்களுக்கு உதவுவது மனநல விழிப்புணர்வை ஊக்குவிப்பது அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஆதரவளிப்பது வரை இவர் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.
ஸ்பிரிங் சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய கல்வி தகவல் மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ் நன்மை என்பது பெரிய செயல்களில் மட்டுமல்ல சிறிய தனிப்பட்ட கனிவன்பு செயல்களிலும் வெளிப்படுகிறது என்றார்.