கவலை தெரிவித்த மலேசிய மருத்துவ சங்கம்..!! காரணம் என்ன..??
மலேசியாவில் அண்மையில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி குறித்து மலேசியா மருத்துவ சங்கம் ஆனது கவலை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் முறையான தகுதி சான்று அல்லது பதிவுகள் இல்லாமல் மருத்துவர்களாக ஆள்மாறாட்டம் செய்த முறையற்ற மருந்துகளை வழங்கி வந்ததாக அண்மை செய்திகள் மூலம் தெரியவந்தது.
இது நோயாளியின் பாதுகாப்பு ஒழுங்கு முறையில் கவனக் கறைவு ஆகியவற்றின் தொடர்பில் முக்கிய கவலைகளை எழுப்புவதன் மூலமாக இருப்பதால் இது குறித்து மலேசிய சங்கத்தின் தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு ராஜு கூறியுள்ளதாக தெரியவந்தது.
மலேசியாவில் மருத்துவத் தொழில் என்பது பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே இருப்பதால் இது போன்ற சட்ட விரோதமான செயல்களுக்கு கடுமையான சட்ட விதிகளை கொண்டிருந்தும் தற்போது கவலைப்படும் விதமாக நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தவறாக நோயை கண்டறிதல், பாதுகாப்பில்லாத சிகிச்சை முறைகளில் இருந்து எழக்கூடிய சிக்கல்கள், முறையாக வழங்கப்படாத மருந்துகள் அல்லது போலியான மருந்துகளும் மற்றும் முறையற்ற சிகிச்சை முதலியவற்றின் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால் அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ள வருடாந்திர சான்றிதழை வைத்துள்ள மலேசியா மருத்துவ மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக மருத்துவ பணியை மாற்ற வேண்டும் என்று டாக்டர் திருநாவுக்கரசு அவர்கள் பிப்ரவரி 19ஆம் தேதி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான சுகாதார பராமரிப்பு செயல்பாடுகளை நிறுத்தவும் கண்காணித்து அமலாக நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுமக்கள் இதுபோன்ற செய்திகளை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். முறையாக பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களிடமும் உரிமம் பெற்ற சுகாதார பராமரிப்பு நிலையங்களில் மட்டுமே சிகிச்சைக்கு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.