ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!!

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்...!!

நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது, ​​எவ்வாறு வெற்றிகரமாக இழப்பீடு பெறுவது? யாரிடம் உதவி கேட்பது? போன்ற கேள்விகள் பலருக்கு இருக்கும்.

அப்படி கொலம்பியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்ட ஆடவர் தனது விடுமுறையை ரத்து செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் அவர் ஏற்கனவே தனது விமானக் கட்டணம் மற்றும் ஹோட்டலுக்கு பணம் செலுத்திவிட்டதால் பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை.

பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்று தெரியாமல் தவித்த அவர், ChatGPT செயற்கை நுண்ணறிவு செயலியைப் பயன்படுத்தினார்.

இழப்பீடு கோருவதற்காக அது உருவாக்கிய கடிதத்தைப் பயன்படுத்தினார்.விமான நிறுவனமும் ஹோட்டலும் அவருக்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டன.

இதன் விளைவாக, அவருக்கு இழப்பீடாக $2,500 (சுமார் 3,200) கிடைத்தது.