பர்மிய பணிப்பெண் சித்திரவதை..!!! முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு கடும் தீர்ப்பு..!!!

பர்மிய பணிப்பெண் சித்திரவதை..!!! முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு கடும் தீர்ப்பு..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பர்மிய பணிப்பெண் ஆன பியாங் நைஹ் டான் என்ற 24 வயது பெண் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக உயிரிழந்தார்.

இதனால் இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் முன்னாள் போலீஸ் அதிகாரி கெவின் செல்வத்திற்கு 10 ஆண்டு கடும் சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

இந்த சம்பவம் 2016ஆம் ஆண்டு நடைபெற்றது.

பியாங் டானுக்கு மூளை பாதிப்பு, கழுத்து பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதோடு, இறக்கும் போதே அவருடைய உடல் எடை வெறும் 24 கிலோ மட்டுமே இருந்தது.

கெவின் செல்வம், முன்னாள் மனைவியிடம் பணிப்பெண்ணை உணவின்றி வாடச் செய்ய தூண்டியதோடு, பணிப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து தரையில் தூக்கி வீசியதற்கும் பொறுப்பானவர் என நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், அவர் வழக்கை விசாரித்த அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளித்ததோடு, சிசிடிவி கேமராவை அகற்றியதன் மூலம் முக்கிய ஆதாரங்களை அழிக்கச் செய்ததும் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கின் பின்னணியில், கெவின் செல்வம் ஒரு காலத்தில் சிங்கப்பூர் காவல் துறையில் சார்ஜென்ட் மேஜராக பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதும், அவர் காவல் துறையிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர்மீது நான்கு முக்கிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. இவை அனைத்தும் அவரது நேரடி மற்றும் மறைமுக ஈடுபாட்டை காட்டுகின்றன.

இந்த வழக்கில் கெவின் செல்வம் மட்டுமல்லாமல், அவரது முன்னாள் மனைவி காயத்ரி மற்றும் முன்னாள் மாமியார் பிரேமா நாராயணசாமிக்கும் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

காயத்ரிக்கு 2021ஆம் ஆண்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

அவர் மேல்முறையீடு செய்தும், நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

பிரேமா நாராயணசாமிக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கின் முடிவுகள், சிங்கப்பூரில் வீட்டு வேலைத் தொழிலாளர்கள் மீதான கொடூரமான நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் எடுத்துள்ள கடுமையான நிலைப்பாட்டைக் காட்டுகின்றன.

பணிப்பெண்கள் மீதான சித்திரவதையை தடுக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்த வழக்கு மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan