யோகி பாபுவின் “ஜோரா கைய தட்டுங்க” படத்தின் டிரைலர் வெளியீடு…!!!

யோகி பாபுவின் "ஜோரா கைய தட்டுங்க" படத்தின் டிரைலர் வெளியீடு...!!!

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகி பாபு நடிக்கும் “ஜோரா கைய தட்டுங்க”  படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அவர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், வாமா என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் வினிஷ் மில்லினியம் இயக்கிய ‘ஜோரா கைய தட்டுங்க”  படத்தில் தனது வேலையை முடித்துள்ளார். இந்தப் படத்தை ஜாகிர் அலி தயாரிக்கிறார்.இதில் ஹரீஸ் பேரடி, வசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன், சாந்திதேவி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து யோகி பாபு விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படம் மே 23ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.