McDonald's விற்பனை குறைவு!! கூடுதல் சலுகைகள் வழங்க திட்டம்!!
McDonald’s விரைவு நிறுவனம் முதல் காலாண்டில் லாபம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நடுத்தர,குறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக நிறுவனம் கூறியது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால் பொருளியல் குறித்து பதற்றம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியது.அமெரிக்காவில் McDonald’s விற்பனை 3.6 சதவீதம் சரிந்துள்ளது. உலகளவில் ஒரு சதவீதம் குறைந்துள்ளது.
உணவகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்ததுள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கூறினார். அதிக வருமானம் பெறும் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் செலவு செய்வதாக கூறப்பட்டது.
கூடுதல் சலுகைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறியது.பிரிட்டனில் விற்பனை சரிந்துள்ளதாகவும் ,ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கில் விற்பனை நன்றாக நடப்பதாகவும் நிறுவனம் கூறியது.