அங் மோ கியோவில் விபத்து!! இரு பிள்ளைகள் உட்பட மூவர் காயம்!!
சிங்கப்பூர் : அங் மோ கியோ பகுதியில் நடந்த கார் விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் சமந்தப்பட்ட இரு கார் ஓட்டுநர்களும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக காவல்துறை கூறியது.
அங் மோ கியோ அவென்யூ 8, அங் மோ கியோ சென்ட்ரல் 2 சாலை சந்திப்பில் மே 9 ஆம் தேதி (நேற்று) மாலை 7.30 மணியளவில் நடந்ததாக 8 world செய்தித் தளம் வெளியிட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த 9,12 வயதுடைய இரண்டு பிள்ளைகளும், 30 வயதுடைய நபரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.இதனை தீயணைப்புத் துறை கூறியது.