நாம் இந்தத் தொகுப்பில் சிங்கப்பூரில் சரியான முறையில் வேலை தேடுவது எப்படி என்றும் ஏமாறாமல் சிங்கப்பூர் செல்வது எப்படி என்றும் ஒவ்வொரு பகுதியாக பார்த்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது பாகத்தில் நாம் ஏமாறாமல் சிங்கப்பூர் செல்வதற்கான ஒரு சில வழிமுறைகளை பார்க்கலாம்.
இதன் முதல் பாகத்தை நீங்கள் படிக்காமல் இருந்தீர்கள் என்றால் தயவு செய்து படித்து விட்டு வரவும் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதன் லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அல்லது வேறு நாடு நீங்கள் செல்ல வேண்டுமென்றால் முதலில் அதற்கு நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும். உங்களுக்கு நீங்களே கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளது.
அது என்னவென்றால் 1,நான் ஏன் வெளிநாடு செல்ல வேண்டும். 2, இங்கேயே என்னால் அந்த பணத்தை சம்பாதிக்க முடியாதா. 3, வெளிநாடு செல்ல நம்மளால் பணம் ரெடி பண்ண முடியுமா. இது போன்ற கேள்விகளை முதலில் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் ஒரு சிலர் இங்கேயே அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கையில் அதை விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயற்சி செய்கிறார்கள்.
அப்படி அவர்கள் முயற்சி செய்யும் பொழுது இங்கே இருக்கும் வேலையை ராஜினாமா செய்கிறார்கள்.
துரதிஷ்டவசமாக அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை என்றால் இங்கே நல்ல சம்பளத்தில் இருந்த வேலையும் போய்விடுகிறது. ஒருவேளை வெளிநாடு சென்று விட்டாலும் அங்கே அந்த வேலை பிடிக்கவில்லை என்றால் அப்பொழுதும் அவர்களுக்கு இழப்புதான், அதனால் நீங்கள் வெளிநாடு செல்ல முடிவெடுக்கும் முன் நன்றாக யோசித்து விட்டு எங்கே போதிய சம்பளம் இல்லை சம்பள உயர்வு இல்லை சரியான வேலை இல்லை என்றால் மட்டும் நீங்கள் வெளிநாடு செல்ல முயற்சிக்கவும்.
இங்கே சரியான வேலை இருக்கிறது சம்பள உயர்வு இருக்கிறது என்றால் வெளிநாடு செல்வது சரியான முடிவு இல்லை.
நமது அடுத்த பாகத்தில் வெளிநாடு செல்வதற்கான முடிவை எடுத்தபின் அடுத்தது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற சில முக்கிய தகவல்களை பார்க்க போகிறோம் அதனால் நமது பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.