விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..??

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா...!!என்ன நடந்தது..??

ஐபிஎல் 2025 தொடரில் நேற்று ஆர்சிபி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய க்ருனால் பாண்டியா மற்றும் விராட் கோலி அணியின் வெற்றி பாதைக்கு வழி வகுத்தனர்.க்ருனால் பாண்டியா கிட்டத்தட்ட 47 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அணியின் வெற்றி பாதைக்கு உதவினார. இந்தப் போட்டியில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது.

ஆர்சிபி அணிக்காக பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பராக இருந்த கேஎல்.ராகுல் இடையே சண்டை ஏற்பட்டது.

இந்த சூடான காட்சி வீடியோவில் பதிவாகி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நேரடி ஒளிபரப்பில் விவாதத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.ஆனால் போட்டிக்குப் பிறகு முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஃபீல்டிங்கை அமைக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக விராட் கோலி கண்டித்ததாக பியூஸ் சாவ்லா கூறினார்.

இதற்கு ராகுல் கோபமடைந்து, “நாங்கள் இவ்வளவு நேரம் செலவிட்டால், மெதுவான ஓவர் ரேட் பிரச்சனை ஏற்படும், அது இருவரையும் பின்னுக்குத் தள்ளிவிடும்!” என்று பதிலளித்ததாகக் கூறியுள்ளார்.