புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!!

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் விளையாட்டு கவுன்சில் புக்கிட் கான்பெராவில் ஒரு புதிய Forest Gym எனும் வன உடற்பயிற்சி கூடத்தைத் திறந்துள்ளது.

இந்த உடற்பயிற்சி கூடம் புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த விளையாட்டு மற்றும் சமூக மையத்தில் அமைந்துள்ளது.

12 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த நிலையம் செம்பவாங் MRT நிலையத்திலிருந்து ஏழு நிமிட நடைப்பயணத்தில் அமைந்துள்ளது.

இது சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் முதல் வெளிப்புறத்தில் அமைந்த உடற்பயிற்சி கூடமாகும்.

இங்கு பொதுமக்கள் பல்வேறு உடற் பயிற்சிகளை முயற்சி செய்யலாம்.

இது இயற்கையுடன் இணக்கமான பயிற்சியின் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.

கான்பெரா பே வட்டாரத்தில் இளம் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான நீர் விளையாட்டுப் பகுதியும் உள்ளது.

மொத்தத்தில் Forest gym உடற்பயிற்சி கூடம் மக்களை ஆக்கபூர்வமாக வைத்திருக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.