சிங்கப்பூரில் இன்று வானில் அரியக்காட்சியை காணலாம்!! எப்போது!!
செவ்வாய் கிரகம் இன்று (ஜனவரி 16) சிங்கப்பூருக்கு மிக அருகாமையில் வரவுள்ளது.
பூமி செவ்வாய் கிரகத்திற்கும் சூரியனுக்கும் இடையில் நேரடியாக கடந்து செல்வதால் அந்த கோளை பார்க்க வாய்ப்புள்ளது.
வானம் தெளிவாக இருந்தால் செவ்வாய் கிரகத்தைக் காண முடியும் என்றும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் இன்று இரவு 7.30 மணியளவில் செவ்வாய் கிரகம் சிவப்பு நிற நட்சத்திரம் போல காட்சியளிக்கும் என்றும், சுமார் 8.30 மணியளவில் வானம் இருட்டாக இருக்கும் சமயத்தில் காண முடியும்.
பின்னர் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் அது உயரும் போது மேலும் தெளிவாகத் தெரியக்கூடும்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதேபோல செவ்வாய் கிரகம் தெரிந்ததாகவும், அதற்கு பின்னர் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த கோளை மீண்டும் பார்க்க வாய்ப்பிருக்கலாம்.