தரை வீட்டின் கொள்ளைப் புறத்தில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து உள்ளது. சமையலறையில் சமையல் நடந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த வீட்டில் பணிப்பெண் தீயைக் கவனித்து எச்சரித்ததைத் தொடர்ந்து, வீட்டிலிருந்த 6 பேரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தீயின் தாக்கம் வீட்டின் மூன்றாவது மாடி வரை எழும்பியுள்ளது.
இதனால் வீட்டின் கூரை, ஜன்னல் சட்டங்கள், சமையலறை மற்றும் வெளிப்புறச் சுவர்கள் கடுமையாக சேதம் அடைந்து காணப்படுகின்றன. இந்த தீ விபத்தால் அண்மை வீட்டிலுள்ள சுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு 6 குடிமைத் தற்காப்புப் படை வாகனங்களும் , 3 காவல்துறை வாகனங்களும் விரைந்து வந்தன. தீயணைப்பாளர்கள் 2 நீர்பீய்ச்சி அடைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பகுதியில் உள்ள சாலைகள் குறைந்தது 3 மணி நேரம் மூடப்பட்டன. தீ விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.