தோ பாயோ லோரோங் 6-யை நோக்கிய, லோரோங் 1 சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, அது கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி உள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வெள்ளை நிற செடான் கார் அங்கிருந்த நடைபாதை கடவையின் சாலை தடுப்பு கம்பிகளில் பலமாக மோதி உள்ளது. மேலும் அங்கிருந்த ஒரு விளக்கு கம்பத்தின் மீது மோதியதால் அது கீழே சாய்ந்தது.
விபத்தின் தாக்கத்தில் காரின் முன் பகுதி மற்றும் இடது பக்க டயர் கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது.
விபத்தின்போது சுயநினைவுடன் இருந்த 62 வயது ஓட்டுநரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மமீட்டு, டான் டோக் செங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அதன் பிறகு அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது.