Queenstown Library செல்ல முடியாதா..?? பொதுமக்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு..!!

Queenstown Library செல்ல முடியாதா..?? பொதுமக்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூரின் Queenstown பகுதியில் உள்ள நூலகம் புதுப்பிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் இடம் தேடும் பொதுமக்களுக்கு இரண்டு மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Queenstown Library மூடப்பட்டதால், அப்பகுதி residents பலரும் படிப்பு மற்றும் அலுவலகப் பணிகளுக்காக மாற்று இடங்களைத் தேடி வந்தனர். இதையடுத்து Queenstown மற்றும் Leng Kee Community Club-களில் study spaces பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.

குயின்ஸ்டவுன் சமூக மன்றத்தின் முதல் தளத்தில் தற்போது தற்காலிக study space அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்திருக்கும்.

மேலும், அங்கு:
👉குளிர்சாதன வசதி
👉Wi-Fi
👉 மின்சார Power Socket
👉 ஓய்வெடுக்க சிறிய பகுதி
ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் மாணவர்கள் படிப்பதற்கும், பொதுமக்கள் வேலைகளைச் செய்வதற்கும் இந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குயின்ஸ்டவுன் சமூக மன்றத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள நிரந்தர study room தற்போது புதுப்பிப்புப் பணிகளில் உள்ளது.

இந்தப் பணிகள் இன்னும் சுமார் இரண்டு வாரங்களில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக முடிந்து, இடம் பயன்பாட்டுக்கு தயாரானதும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இதற்கிடையில், லின் கீ சமூக மன்றத்தின் (Leng Kee Community Club) இரண்டாவது தளத்திலும் பொதுமக்களுக்கான study room உள்ளது.

இந்த இடமும் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். அங்கு Wi-Fi மற்றும் மின்சார Power Socket வசதிகளும் உள்ளன.

புதிய study spaces மாணவர்கள் படிப்பதற்காக மட்டுமின்றி, வீட்டில் வேலை செய்ய முடியாதவர்கள் தற்காலிகமாக பணிகளை மேற்கொள்ளவும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.


மேலும், சிங்கப்பூரில் சில நேரங்களில் ஏற்படும் haze காரணமாக வெளிப்புறச் சூழலைத் தவிர்க்க விரும்பும் residents-க்கும் இந்த indoor spaces பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Queenstown Library புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்தாலும், பொதுமக்களின் படிப்பு மற்றும் வேலை தேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது அப்பகுதி residents-க்கு நிம்மதியை அளித்துள்ளது.