1MDB விவகாரத்தில் DBS சிக்கியது எப்படி? US$1 பில்லியன் வழக்கின் பின்னணி..!

சிங்கப்பூர்: மலேசியாவின் 1MDB ஊழல் விவகாரம் தொடர்பாக, சிங்கப்பூரின் DBS வங்கி மீது சுமார் S$1.3 பில்லியன் (US$1.03 பில்லியன்) இழப்பீடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
1MDB விவகாரத்துடன் தொடர்புடைய சொத்துகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நான்கு நிறுவனங்களின் கலைப்பாளர்கள் (liquidators) இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்
இந்த வழக்கில்
👉 BlackRock Commodities (Global),
👉Platinum Global Luxury Services,
👉Affinity Equity International Partners
👉TKIL Global Investments ஆகிய நிறுவனங்கள் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1Malaysia Development Berhad (1MDB) கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதைய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் இதனை இணைந்து நிறுவினார்.
1MDB நிதியில் இருந்து சுமார் US$4.5 பில்லியன் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பல்வேறு நாடுகளில் அந்த நிதியுடன் தொடர்புடைய சொத்துகளை அடையாளம் கண்டு மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை DBS வங்கி நிராகரித்துள்ளது. இந்த வழக்கை கடுமையாக எதிர்கொள்ளப் போவதாகவும், இந்தக் கோரிக்கைக்காக இதுவரை எந்தத் தொகையும் ஒதுக்கப்படவில்லை என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளின் மேலதிக விவரங்களை DBS வெளியிடவில்லை.
1MDB விவகாரத்தில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிதியை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகள் சர்வதேச அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கு முன்பும், 1MDB நிதி தொடர்பான மோசடிக்கு உதவியதாகக் கூறி வங்கிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தற்போது DBS வங்கிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வழக்கும், பல ஆண்டுகளாக நீடித்து வரும் 1MDB விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய சட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளது.
இந்த வழக்குச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பங்குச் சந்தையில் DBS வங்கியின் பங்குகள் 0.77% சரிந்து S$ 77.50% ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தன.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
