Singpass பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! Android-லும் இனி Passkey வசதி..!

Singpass பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! Android-லும் இனி Passkey வசதி..!

சிங்கப்பூரில் ஆண்ட்ராய்டு (Android) கைப்பேசி பயன்படுத்தும் சிங்பாஸ் (Singpass) பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (செப்டம்பர் 9) முதல் Android பயனர்களும் Singpass செயலியில் Passkey வசதியைப் பயன்படுத்தி உள்நுழைய முடியும்.

இதன் மூலம் Singpass சேவைகளைப் பயன்படுத்தும்போது ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது.

Passkey என்றால் என்ன?
Passkey மூலம் Singpass-ல் உள்நுழையும்போது வழக்கமான கடவுச்சொல் அல்லது OTP-ஐ உள்ளிட வேண்டிய அவசியம் இருக்காது.
அதற்குப் பதிலாக, பயனர்கள் தங்களது கைப்பேசியில் உள்ள:
👉முக அடையாளம் (Face Recognition)
👉கைரேகை (Fingerprint)
👉6 இலக்க Singpass PIN
ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தி உள்நுழையலாம்.

சிங்கப்பூர் அரசாங்க தொழில்நுட்ப நிறுவனம் (GovTech), Android பயனர்களுக்கு Singpass Passkey வசதியை உருவாக்குவது தொடர்பான அறிவிப்புகளை Singpass செயலி மூலம் படிப்படியாக அனுப்பும். இந்த வசதியைப் பயன்படுத்த விரும்பும் Android பயனர்கள் தங்களது Singpass செயலி சமீபத்திய பதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Singpass Passkey வசதி முதலில் iPhone பயனர்களுக்கு கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 9 நிலவரப்படி, சுமார் 8 லட்சம் பயனர்கள் Singpass செயலி மூலம் ஏற்கனவே Passkey-ஐ உருவாக்கியுள்ளதாக GovTech தெரிவித்துள்ளது.

கைப்பேசிகளைத் தொடர்ந்து Desktop கணினிகளுக்கான Passkey வசதியும் இந்த ஆண்டு(2026) இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், Passkey மூலம் Singpass-ல் உள்நுழையும்போது உதவி தேவைப்படும் பயனர்களுக்கு ஆதரவு வழங்கவும், இந்த புதிய வசதி குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் GovTech, IMDA மற்றும் People’s Association உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்.

இதன் மூலம் Android பயனர்களும் இனி கடவுச்சொல் மற்றும் OTP முறையைத் தவிர்த்து, தங்களது கைப்பேசியின் பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தி Singpass சேவைகளில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் உள்நுழைய முடியும்.