சிங்கப்பூரில் 6 பெண்கள் மீது 17 குற்றச்சாட்டுகள்..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் காவல்துறை அனுமதியின்றி பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்றது மற்றும் அவற்றை ஏற்பாடு செய்தது தொடர்பாக 6 பெண்கள் மீது மொத்தம் 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.
22 முதல் 36 வயதுக்குட்பட்ட இந்த பெண்கள், Public Order Act, Penal Code மற்றும் Protection from Harassment Act ஆகிய சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் செப்டம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
2024 பிப்ரவரி 2ஆம் தேதி Orchard Road பகுதியில் இருந்து Istana நோக்கி நடைபெற்ற அனுமதியற்ற பேரணியில் பங்கேற்றதாக 33 மற்றும் 36 வயதுடைய இரு பெண்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்த பேரணியில் பாலஸ்தீன ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் தர்பூசணி சின்னம் கொண்ட குடைகள் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் 24 வயது பெண் ஒருவர் மட்டும் 9 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
அனுமதியற்ற பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றது, Marina Barrage பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகள், candlelight vigil உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும், 2025 ஜனவரி 13ஆம் தேதி National University of Singapore அருகே அனுமதியின்றி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் காவல்துறை அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள் அல்லது பேரணிகளை ஏற்பாடு செய்வதும், அவற்றில் பங்கேற்பதும் சட்டவிரோதமானது என காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் நடைபெறும் சம்பவங்கள் சிங்கப்பூரின் சமூக அமைதி, பொது ஒழுங்கு மற்றும் இன-மத நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.